திருக்குறள் - சிலப்பதிகாரத்தில் வேட்டுவர்
Markandan, C (2026) திருக்குறள் - சிலப்பதிகாரத்தில் வேட்டுவர். In: ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை அறிவியல் கல்லூரி, மயிலம் கம்பன் கழகம் அறக்கட்டளை, திண்டிவனம் மற்றும் உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கம், யாழ்ப்பாணம் திருவண்ணாமலை, திருப்பெருந்துறை அடியார்கள் அறக்கட்டளை சூர்ய த்ருதி நாட்டியாலயா பன்னாட்டு மையம் கம்பன், 01.06.2026, THIRUVANNAMALI.
திருக்குறள்-சிலப்பதிகாரத்தில் வேட்டுவர்.pdf
Download (5MB)
Abstract
சங்ககாலப் பெருங்காப்பியமான சிலப்பதிகாரம், தமிழரின் சமூக, பண்பாட்டு மற்றும் மத வாழ்வியலை பல்வேறு கோணங்களில் வெளிப்படுத்தும் முக்கிய இலக்கியமாகும். இக்கட்டுரை, அதிலுள்ள வேட்டுவர் (வேடர்) சமூகத்தின் வாழ்வியல் மற்றும் வழிபாட்டு மரபுகளை ஆய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக "வேட்டுவவரி” எனப்படும் பகுதியின் வழியாக, வேட்டுவர் சமூகத்தின்
இயற்கை சார்ந்த வாழ்க்கை, வேட்டை முறைகள், வழிப்பது நடைமுறைகள், சமூக ஒழுங்குகள், மற்றும் கொற்றவை வழிபாடு ஆகியவை ஆராயப்படுகின்றன.
சாலினி என்ற வேட்டுவர் குல மங்கை தெய்வமேற்று வெறியாடும் நிகழ்வு, அக்கால சமுதாயத்தில் நிலவிய சாமியாட்ட வழக்கத்தையும். தெய்வநம்பிக்கையின் ஆழத்தையும் வெளிப்படுத்துகிறது. மேலும்,
கண்ணகியின் தெய்வீக நிலையை முன்கூட்டியே அறிவிக்கும் சிங்கநோக்கு உத்தி இளங்கோவடிகளின் கலைப்பாணியை எடுத்துக்காட்டுகிறது. வேட்டுவர்களின் வாழ்க்கையில் மறம் (வீரம்) மற்றும் அறம் (ஒழுக்கம்) ஆகியவை எவ்வாறு பரிமாறுகின்றன என்பதும் இக்கட்டுரையில் விளக்கப்படுகிறது. இதன் மூலம்,
சிலப்பதிகாரத்தில் வேட்டுவர் சமூகத்தின் பண்பாட்டு தனித்துவம், மத நம்பிக்கை, மற்றும் சமூக மாற்றம் ஆகியவை ஆழமாகபிரதிபலிக்கப்படுவதை இக்கட்டுரை விளக்கமுற்படுகிறது.
| Item Type: | Conference or Workshop Item (Paper) |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | IR Admin |
| Date Deposited: | 01 Sep 2026 09:19 |
| Last Modified: | 01 Sep 2026 09:19 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/22251 |
