சங்க இலக்கியங்களில் முதியோர் வாழ்வியல்
Thenmozhi, DR.D (2025) சங்க இலக்கியங்களில் முதியோர் வாழ்வியல். In: Thamizh Ilakiyangalil Vazhviyal, 31-01-2025, DR.R.A.N.M.ARTS AND SCIENCE COLLEGE,ERODE.
Sanga Ilakkiyathil Muthiyor Vazhviyal.pdf - Published Version
Download (3MB)
Abstract
ஆய்வுச் சுருக்கம்
கடவுளுக்கு இணையாக முதியோரைக் கருதிய காலம் ஒன்று இருந்தது இப்போது காலம் மிகவும் மாறிப் போய்விட்டது. நமது கலாசாரத்துடன் பொருந்திப் போகிறதோ, இல்லையோ கூடுமானவரை மேலை நாட்டைப் பின்பற்ற நாம் முயன்று கொண்டிருக்கிறோம். "உள்ளம் வேண்டியபடி செல்லும் உடலாக" அமையாமல் அது நோய்க்கும் சோர்வுக்கும் கொள்கலனாக கொள்கலனாக அமைவதால், முதுமை ஆராதிக்கப்படுவதில்லை என்று மகாகவி பாரதி கூறுவது போல், முதியோரை மதிக்கும் பண்பாடு என்பது பெரிதும் குறைந்துவிட்டது. கடவுளாகக் கருதப்பட்ட அவர்கள் சுமையாகவோ செலவாகவோ கருதப்படுகிறார்கள். எனினும், அறிவியல் வளம்பெற்றுள்ள இன்று முதியோரின் நலவாழ்வு மிகுந்த கவனத்துடன் பாதுகாக்கப்படுகிறது. இயற்கையோடியைந்த வாழ்வினரான சங்கத் தமிழரிடையே முதியோர் வாழ்வு, முதுமை நிலை போன்றவற்றை அறிய முற்படுவோம். சங்க கால மக்கள் முதுமையை பெரிய இடையூறாகக் கருதாமல் இடை ஒதுங்காமல். வாழ்வியல் இன்பங்களை நுகர்ந்து சமூகத்தாலும் சுற்றத்தாலும் புறக்கணிக்கப்படாது மதிப்புடன் வாழ்ந்ததை சங்க இலக்கியப் பாடல்கள் வழி முற்படுவது ஆராய அமைகிறது.
| Item Type: | Conference or Workshop Item (Paper) |
|---|---|
| Additional Information: | ISBN 978-81-973424-0-0 |
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | Mr IR Admin |
| Date Deposited: | 27 Aug 2026 07:56 |
| Last Modified: | 27 Aug 2026 07:56 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/15172 |
