சிந்துவெளி நாகரிகமும் திருக்குறளும் - பண்பாட்டு வாழ்வியல்

Thenmozhi, DR.D (2025) சிந்துவெளி நாகரிகமும் திருக்குறளும் - பண்பாட்டு வாழ்வியல். In: World Thirukkural conference,chennai, 24-08-2025, CHENNAI.

[thumbnail of சிந்துசமவெளி நாகரிகமும் திருக்குறளும்- பண்பாட்டு வாழ்வியல் 2025 முனைவர் தே.தேன்மொழி.pdf] Text
சிந்துசமவெளி நாகரிகமும் திருக்குறளும்- பண்பாட்டு வாழ்வியல் 2025 முனைவர் தே.தேன்மொழி.pdf - Published Version

Download (353kB)

Abstract

ஆய்வுச் சுருக்கம்
சிந்துவெளி நாகரிகத்திற்கும் திருக்குறளுக்கும் இடையே காணப்படும் வாழ்வியல் மற்றும் பண்பாட்டு ஒற்றுமைகளை ஆராய்வதை இவ்வாய்வு, நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக சமூக ஒழுங்கமைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தொழில் மரியாதை, நீர் மேலாண்மை, சமத்துவக் கொள்கை, ஒழுக்கநெறி, மனிதநேயம் போன்ற கூறுகள் ஒப்பீட்டு அடிப்படையில் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. நேரடி வரலாற்றுத் தொடர்புகள் உறுதிப்படுத்தப்படாத நிலையிலும், இவ்விரண்டிலும் வெளிப்படும் நாகரிகச் சிந்தனைகள் இந்திய மக்களின் தொன்மையான பண்பாட்டு தொடர்ச்சியையும் உயர்ந்த வாழ்வியல் விழுமியங்களையும் பிரதிபலிப்பதாக இவ்வாய்வு விளக்குகிறது. மேலும், தொல்லியல் சான்றுகளும் இலக்கியச் சான்றுகளும் ஒருங்கிணைந்து ஆய்வு செய்யப்படும் போது, தமிழர் பண்பாட்டு மரபின் தொன்மை மற்றும் உலகளாவிய பார்வை தெளிவடைகிறது என்பதை இக்கட்டுரை நிறுவுகிறது.
திறவுச் சொற்கள்: Indus Valley Civilization, திருக்குறள், நகர நாகரிகம், சமூக ஒழுங்கமைப்பு, பண்பாட்டு நெறி, அறவியல், சூழலியல் விழிப்புணர்வு, நீர் மேலாண்மை, தமிழர் நாகரிகம், ஒப்பீட்டு ஆய்வு

Item Type: Conference or Workshop Item (Paper)
Subjects: Tamil > Tamil
Domains: Tamil
Depositing User: Mr IR Admin
Date Deposited: 27 Aug 2026 09:04
Last Modified: 27 Aug 2026 09:04
URI: https://ir.vistas.ac.in/id/eprint/14971

Actions (login required)

View Item
View Item