தமிழ்நாட்டு ஊர்ப் பெயர்களில் தமிழர் வரலாற்றுப் பதிவுகள்
Thenmozhi, DR.D (2025) தமிழ்நாட்டு ஊர்ப் பெயர்களில் தமிழர் வரலாற்றுப் பதிவுகள். AYUDA EZHUTHU, Peer Reviewed Journal, 13. pp. 43-48. ISSN 2278-7550
ஆயுத எழுத்து UGC Journal தமிழ்நாட்டு ஊர்ப் பெயர்களில் தமிழர் வரலாற்றுப் பதிவுகள் 2025.pdf - Published Version
Download (3MB)
Abstract
ஆய்வுச் சுருக்கம்
தமிழ்நாட்டு ஊர்ப் பெயர்கள் தமிழரின் வரலாறு, பண்பாடு, அரசியல், சமயம், சமூக உளவியல் ஆகிய அனைத்தையும் பதிவு செய்து நிற்கின்றன. மனிதன் இடம்பெயர்ந்தபோது, அவன் தம் ஊரின் பெயரைத் தொடர்ந்தும் பயன்படுத்தி, பழைய நினைவுகளைப் புதிய இடத்துடன் இணைக்கும் பண்பாட்டை உருவாக்கியிருக்கிறான். இதன் மூலம் ஊர்ப் பெயர்கள் தமிழரின் வரலாற்றுக் கருவூலமாகவும், சமூக நினைவகமாகவும் விளங்குகின்றன. இத்தகைய ஊர்ப் பெயர்கள், சமயப் பரவலும், அரசர்களின் பெருமைகளும், பண்டைய மத–சமூகச் செயல்பாடுகளும் இணைந்து வெளிப்படுத்துகிறது.
சுந்தரர், மெய்கண்ட தேவர், அமர் நீதி அடியார் ஆகியோரைப் பற்றிய புராண–இலக்கியச் சான்றுகள், நல்லூரின் சமயப்பண்பாட்டை வெளிப்படுத்துகின்றன. அதே சமயம் சோழர், பாண்டியர், பிற அரசர்கள் தமது ஆட்சிப் புகழையும், குடும்ப மரபையும் நிலைநிறுத்த பல நல்லூர்களை நிறுவியிருப்பதும் அரசியல் வரலாற்றைச் சுட்டுகிறது. இவ்வாறான ஊர்ப் பெயர்கள், தமிழர் சமூகத்தில் நீர்ப்பாசனம், விவசாயம், போக்குவரத்து, சமயத் தளங்கள் ஆகியவை எவ்வாறு வரலாற்றுப் பதிவுகளாய் நிலைத்துள்ளன என்பதைக் காட்டுகின்றன.
கருச்சொற்கள் : பண்பாடு, அரசியல், சமயம், சமூக உளவியல், ஊர்ப் பெயர்கள், நல்லூர், ஏரி, ஆறு, கூடல்.
| Item Type: | Article |
|---|---|
| Additional Information: | 2278-7550 |
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | Mr IR Admin |
| Last Modified: | 12 May 2026 07:20 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/14959 |
