தொல்காப்பிய மெய்ப்பாடுகளும் உணர்வுகளும்
Thenmozhi, DR.D (2025) தொல்காப்பிய மெய்ப்பாடுகளும் உணர்வுகளும். In: THAMIZH AAIVU THADATHTHIL THOLKAPPIYAM, 20-1202025, Pondicherry.
தொல்காப்பிய மெய்ப்பாடுகளும் உணர்வுகளும் - தமிழாய்வுத் தடத்தில் தொல்காப்பியம் 2025.pdf - Published Version
Download (2MB)
Abstract
ஆய்வுச் சுருக்கம்
தமிழ் இலக்கிய மரபில் முதன்மை பெற்ற தொல்காப்பியம் மனித வாழ்வியலை ஆழமாக ஆராய்ந்த இலக்கண நூலாகத் திகழ்கிறது. அதன் பொருளதிகாரத்தில் அகம் மற்றும் புறம் என்ற இரு வாழ்வியல் நிலைகளின் வழியாக மனித மன உணர்வுகள், சமூக உறவுகள், வாழ்வியல் நெறிகள், உணர்ச்சி வெளிப்பாடுகள் ஆகியவை தெளிவாக விளக்கப்படுகின்றன. குறிப்பாக காதல், பிரிவு, வீர உணர்வு, அச்சம், வெட்கம், மகிழ்ச்சி போன்ற மனித மனத்தின் உளச்செயற்பாடுகள் இலக்கிய வடிவில் அமைக்கப்பட்டுள்ளமை, தொல்காப்பியத்தின் உளவியல் நோக்கினை வெளிப்படுத்துகின்றது. இவ்வாய்வு, தொல்காப்பியத்தில் இடம்பெறும் மனித மனம் சார்ந்த சிந்தனைகளையும், இக்கால உளவியல் கோட்பாடுகளுடன் அவை கொண்டுள்ள ஒற்றுமைகளையும் ஆராய்கிறது. மேலும், தொல்காப்பியம் ஒரு இலக்கண நூலாக மட்டுமன்றி மனித மனத்தின் இயல்புகளை விளக்கும் சிறந்த உளவியல் நூலாகவும் விளங்குகின்றது என்பதை நிறுவுவதே இவ்வாய்வின் நோக்கமாகும்.
திறவுச் சொற்கள் : தொல்காப்பியம், பொருளதிகாரம், அகம், புறம், உளவியல், மனித மனம், உணர்ச்சி வெளிப்பாடு, சமூக வாழ்வியல், இலக்கிய நெறி, தமிழ்ச் சிந்தனை
| Item Type: | Conference or Workshop Item (Paper) |
|---|---|
| Additional Information: | ISBN : 978-81-994106-6-4 |
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | Mr IR Admin |
| Last Modified: | 12 May 2026 07:23 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/14914 |
