பாரதியின் இதழியல்
Thenmozhi, DR.D (2026) பாரதியின் இதழியல். In: Thamizhiyal Thadathil Mahakavi Bharathiyar, 31-01-2026, Pondicherry.
பாரதியின் இதழியல் 2026.pdf - Published Version
Download (3MB)
Abstract
ஆய்வுச் சுருக்கம்
“காரிருள் அகத்தில் நல்ல நதிரொளி நீதான்” என்று பாவேந்தர் பாரதிதாசன் போற்றிய பத்திரிகைத் துறை, சமூக விழிப்புணர்வு, உண்மை வெளிப்பாடு, மக்களாட்சி பாதுகாப்பு ஆகிய உயரிய நோக்கங்களைக் கொண்ட ஊடகமாகத் திகழ்ந்தது. ஆனால் இன்றைய உலகமயமாக்கப்பட்ட தகவல் சமூகத்தில், இதழியல் துறை வணிகமயப் போட்டி, பரபரப்பு செய்தி உருவாக்கம், அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தங்கள் போன்ற காரணிகளால் அதன் அடிப்படை அறநெறிகளை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. வாசகர்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் செய்திகளே முன்னுரிமை பெறுகின்றன; உண்மைத் தன்மை, மனிதநேயம், சமூகப் பொறுப்பு போன்ற இதழியல் விழுமியங்கள் பின்தள்ளப்படுகின்றன.
இவ்வாய்வு, சமகால இதழியலில் காணப்படும் அறச்சிக்கல்கள், போட்டி மனப்பான்மை, செய்தி வணிகமயமாக்கம் ஆகியவற்றை ஆராய்கிறது. மேலும், ஊடகத் துறையில் நேர்மை, பொறுப்புணர்வு, உண்மைத்தன்மை ஆகிய நெறிமுறைகள் எவ்வாறு சீர்குலைகின்றன என்பதையும் விளக்குகிறது. இதழியலின் சமூகப் பொறுப்பை மீட்டெடுப்பதற்கான அவசியத்தையும், மனிதநேய அடிப்படையிலான ஊடகப் பண்பாட்டின் தேவையையும் இக்கட்டுரை வலியுறுத்துகிறது.
| Item Type: | Conference or Workshop Item (Paper) |
|---|---|
| Additional Information: | ISBN : 978-81-994106-9-5 |
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | IR Admin |
| Date Deposited: | 27 Aug 2026 09:13 |
| Last Modified: | 27 Aug 2026 09:13 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/14822 |
