திருவாசகத்தில் பல்துறை அறிவியல் சிந்தனைகள்
Priya, S (2025) திருவாசகத்தில் பல்துறை அறிவியல் சிந்தனைகள். In: பழந்தமிழ் இலக்கியங்களில் பல்துறை அறிவியல் சிந்தனைகள், 16.04.2025, chennai.
Thiruvasakam- Article.pdf
Download (12MB)
Abstract
மாணிக்கவாசகர் அருளிச்செய்த திருவாசகமும் திருக்கோவை யாரும் பன்னிரு சைவத் திருமுறைகளுள் எட்டாவது திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது. "திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்" என்னும் வாசகம் திருவாசகத்தின் சிறப்பினை எடுத்துரைக்கும். சைவ இலக்கியங்களில் 'தோத்திரம்' என அழைக்கப்படும் திருவாசகம் எளிமையும் இனிமையும் நிறைந்து அருள் தோய்ந்த 658 பாடல்களால் இறை யருளின் உருக்கமாக பாடப்பட்டுள்ளது. பக்திசுவை நனி சொட்ட சொட்ட பாடப்பெற்ற சிறப்பு க்குரியது. "பால் கலந்து தேன் கலந்து பசுஞ்கனித் தீஞ்சுவைக் கலந்து ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே" என்று ராமலிங்க அடிகளார் திருவாசகத்தின் பெருமையினை உணர்த்துகின்றார். உள்ளத்தை உருகச் செய்யும் இந்நூலின் சிறப்பினையும் பெருமையினையும் உணர்ந்த பிற சமயத்தவரான ஜி.யூ. போப் அவர்கள் திருவாசகத்தினை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் என்பதும் இந் நூலின் சிறப்பினை பறைச்சாற்றும்.
| Item Type: | Conference or Workshop Item (Paper) |
|---|---|
| Additional Information: | ISBN : 978-93-342-5916-2 |
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | Mr IR Admin |
| Date Deposited: | 10 May 2026 12:23 |
| Last Modified: | 10 May 2026 12:23 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/14561 |
