திரையிசைப் பாடல்களும் கிராமிய மக்களும்
Deeparani, N and Gubendiran, P (2026) திரையிசைப் பாடல்களும் கிராமிய மக்களும். In: தமிழ் திரையிசைப் பாடல்கள்: சமூக மாற்றமும் விழிப்புணர்வும். 1 ed. அகில் பதிப்பகம், Chennai, pp. 337-350. ISBN 978-81-69145-11-4
tamil thirisai.pdf
Download (2MB)
Abstract
திரையிசைப்பாடல்களானது கிராமிய மக்களின் இயல்புகளையும். அன்றாட வாழ்வாதாரத்தையும் மக்களின் எதார்த்தமான வாழ்வின் நிகழ்வுகளை பற்றியும் அவர்களின் அனைத்து சமுதாய சடங்குகள் பற்றியும் அறிந்து கொள்ள எவ்வாறு துணை புரிகிறது என்பதை இக்கட்டுரை ஆராயப்படுகிறது. மனித சமுதாயத்தின் பிறப்பு முதல் இறப்பு வரையில் பாடப்படும் நாட்டுப்புறப்பாடலானது திரைப்படங்கள் மூலம்
கிராம மக்களுக்கு தேவையான கருத்துக்களை அவர்களின்
சூழலுக்கு ஏற்றப்படி எவ்வாறு விதைக்க வேண்டும் என்பதையும், திரைப்படங்கள் என்னும் தொடர்பு சாதனத்தின் மூலம் பாமர மக்களுக்கு எளிதில் புரியும்படியான எளிய முறையில் தன் பாடல்கள் மூலம் எவ்வாறு கொண்டு சேர்க்கிறது என்பதையும் ஆராயப்படுகிறது. மனிதன் கேட்கும் முதல் பாடலான தாலாட்டானது குடும்ப சூழல் சமுதாய சூழ்நிலை போன்றவற்றை கூறி தாலாட்டப்படுகிறது. இத்தாலாட்டு குழந்தைகள் நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் வளர வேண்டும் என்ற நோக்கத்தோடு திரைப்படங்களில் பாடப்படுகிறது இப்பாடல் களானது குழந்தை பருவத்திலேயே சொல்லிப் பாடுவதால் இளமை பருவத்திலேயே சமுதாய கருத்தினை விதைக்க
வேண்டும் என்ற முயற்சியை திரைப்படப்பாடல்கள் செய்கிறது என்பதை ஆராயப்படுகிறது. மேலும் சமுதாயத்தில் பெண்ணின் பெருமையை எடுத்து கூறும் போது பெண்களின் பொறுமை, பெண்ணின் தாய்மை பற்றியும் குழந்தைகளுக்கு அவள் செய்ய வேண்டிய கடமை எது? என்பது போன்ற பல்வேறு கருத்துக்களை
திரையிசைப் பாடல்கள் மூலம் சிந்தனை செய்யவும் சமுதாய பணியாற்றவும் சமுதாயத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லவும் செய்கிறது என்பதையும் ஆராயப்படுகிறது. சமுதாய மக்கள் வாழும் சூழல்கள் நிறைந்த நாட்டுப்புற கதைக்கு தகுந்தார் போல நாட்டுப்புறப்பாணியில் கருத்துமிக்க பாடல்களை இயற்கையோடு ஒட்டி செல்லக்கூடிய பாடல்களானது
சமூக வளர்ச்சியை மனதில் கொண்டு எவ்வாறு பாடப்பட்டன என்பது ஆராயப்பட்டுள்ளது. விவசாயமானது மக்களின் அடிப்படை தேவையான உணவுப் பற்றிய பல்வேறு தேவையினை சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு தனி மனிதனும் சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதையும், கூட்டுப்பண்ணையின் அவசியம், மற்றும் நாட்டு வளம், விவசாயியின்வாழ்வாதாரத்தின்
அவசியம், போன்ற கருத்துக்களை மனதில் கொண்டு திரைப் படங்கள் எவ்வாறு எடுக்கப்பட்டன என்பதை விளக்கப்படுகிறது.
| Item Type: | Book Section |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | Surya P |
| Date Deposited: | 28 Oct 2026 03:49 |
| Last Modified: | 28 Oct 2026 03:49 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/23212 |
