நறுந்தமிழ் பன்னாட்டு ஆய்விதழ் -1
Irudhayaraj, A (2026) நறுந்தமிழ் பன்னாட்டு ஆய்விதழ் -1. 1 ed. 1, 1 (1). Narunthamizh Ilakkiyapozhil (All’s squire Publication), Pallavaram, chennai-117.. ISBN 978-93-5912-109-3
narunthamizh -1.pdf
Download (1MB)
Abstract
தமிழர் இனம் உலகில் தொன்மை வரலாறு பெற்ற இனங்களுள் ஒன்று. இதற்குத் தெளிவான சான்றுகள் பல உண்டு. தமிழக வரலாறு, தமிழர் வரலாறு, தமிழ்மொழி வரலாறு என இன்று வரை பல அறிஞர் பெருமக்களால் பலவாறு ஆய்வு செய்யப்பட்டு ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. இந்த ஆய்வுகளுக்குத் தமிழக வரலாற்று மூலங்களான இலக்கியங்கள், இலக்கணங்கள், உரைகள், கல்வெட்டுகள், செப்பேடுகள், அகழ்வாராய்ச்சிப் பொருட்கள், நாணயங்கள், கலைகள், வெளி நாட்டார்க் குறிப்புகள், ஆவணக்குறிப்புகள், மொழி ஆகியன சான்றாக அமைகின்றன. இவற்றுள் பல மூலங்கள் இன்னும் முழுமையாக ஆராயப்படாத நிலையிலும் உள்ளன. கிடைத்த மூலங்கள் இன்னும் பலக் கோணப்பார்வையில் ஆராயப்பட வேண்டியதும் இன்றியமையாததாகும்.
| Item Type: | Book |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | IR Admin |
| Last Modified: | 14 Jun 2026 14:43 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/21569 |
