சப்தத் தானத் தலங்களின் மகிமை

Durgadevi, Y (2026) சப்தத் தானத் தலங்களின் மகிமை. 1 ed. Today publisher, Today publication. ISBN 978-93-47021-92-3

[thumbnail of 9th book 2026.pdf] Text
9th book 2026.pdf

Download (1MB)

Abstract

இறைவன் எழுந்தருளியுள்ள இடத்திற்குக் 'கோயில்' என்றும் கோயில் உள்ள இடத்திற்குத் 'தலம்' என்றும் பெயர்கள் வழங்குகின்றன. இவையிரண்டும் சிறப்பு நோக்கி முறையே 'திருக்கோயில்' என்றும், 'திருத்தலம்' என்றும் வழங்கப் பெறுவது மரபு. இத்தகைய திருத்தலங்களில் புகழ் பெற்ற பல திருக்கோயில்கள் உள்ளன. இறைவன் அருவமாகவும், உருவமாகவும், அருவுருவமாகவும் இருப்பதாக சைவ சித்தாந்தம் கூறுகின்றது. அவ்வகையில் இறைவன் அருவமாக உள்ள தலங்கள் ஐந்து (பஞ்சபூதத் தலங்கள்), உருவமுள்ள தலங்கள் எட்டு (அட்ட வீரட்டத் தலங்கள்), அருவுருவமாக உள்ள தலங்கள் ஏழு (சப்த தானத் தலங்கள்) மொத்தம் இருபது தெய்வத் திருத்தலங்கள் உள்ளது. இவற்றில் தொகுப்புத் தலம், சப்த தானத் தலங்கள் ஏழு. அவை தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகியவை. திருநந்தித் தேவரின் திருமணத்தின் போது, திருப்பழனத்திலிருந்து பழங்கள், திருச்சோற்றுத் துறையிலிருந்து திருவமுது, திருவேதிகுடியிலிருந்து வேதியர்கள், திருக்கண்டியூரிலிருந்து மகரக் கண்டிகை, திருப்பூந்துருத்தியிலிருந்து மலர்கள், திருநெய்த்தானத்திலிருந்து நெய் என வேண்டிய பொருட்கள் எல்லாம் வந்தன.

Item Type: Book
Subjects: Tamil > Tamil
Domains: Tamil
Depositing User: IR Admin
Date Deposited: 11 Jun 2026 10:09
Last Modified: 28 Aug 2026 07:23
URI: https://ir.vistas.ac.in/id/eprint/21217

Actions (login required)

View Item
View Item