அம்பையின் படைப்பும் ஆளுமையும்
Poornima, G and Shanthi, S (2025) அம்பையின் படைப்பும் ஆளுமையும். Today Ithazh - International Journal, 12 (11). pp. 113-116. ISSN 2349 - 1914
5.பூர்ணிமா.pdf
Download (5MB)
Abstract
அம்பையின் எழுத்துக்கள் மனித
மனங்களில் மாற்றத்திற்கான தூண்டுதலாகவே
இருப்பதை அவரது படைப்புகளான சிறுகதைகள்
உணர்த்துகின்றன. சிறுகதை இலக்கியமானது
இக்கால இலக்கிய வகைகளுள் தனக்கென தனி
அடையாளத்தையும், தனித்துவத்தையும்
உருவாக்கியுள்ளது. அம்பையின் சிறுகதைகள்
கதையாக மட்டுமில்லாமல் படிப்போரின்
வாழ்வியல் தடங்களை ஒருங்கிணைக்கும்
நினைவுச் சின்னங்களாகவும் இருக்கின்றன. நம்
சமூகத்தில் எந்த ஒரு இலக்கியம் படைக்கப்படும்
போதும் அதன் படைப்பாளியும்
அவ்விலக்கியத்தின் வழியே ஆராயப்படும் போது
தான் அவ்விலக்கியத்தின் எதார்த்த நிலையை
புரிந்துக்கொள்ள முடியும். இன்றைய
சமுதாயத்தின் சிக்கல்கள் முதல் சவால்கள் வரை
கதையின் மையப் பொருளாக்கப்பட்டு
சிறுகதைகள் எழுதப்படுகின்றன. அவ்வாறு
எழுதப்படும் சிறுகதைகளின் நோக்கம்
நிறைவேறும் போது அந்தப் படைப்பானது வெற்றி
பெறுகின்றது. தமிழ்ச் சிறுகதைகளில் அம்பையின்
சிறுகதைகள் தனக்கென தனிப் பாதையை
அமைத்துக் கொண்டு பயணித்திருக்கின்றன.
அம்பையின் சிறுகதை உருவாக்கத்தில் கதைத்
தலைப்பு, கதைத்திட்டம், கதாப்பாத்திரம் வழியே
அவரது படைப்பாளுமையை ஆராய்வதே
இக்கட்டுரையின் நோக்கமாகும்.
| Item Type: | Article |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | IR Admin |
| Date Deposited: | 11 Jun 2026 09:20 |
| Last Modified: | 28 Aug 2026 07:37 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/21211 |
