தமிழர்களின் தாவர உணவுகள்
Gubendiran, P (2026) தமிழர்களின் தாவர உணவுகள். நறுந்தமிழ் பன்னாட்டு ஆய்வு இதழ்., 1 (1): 6. pp. 27-30. ISSN 978-93-5895-516-3
januvary 2026-27-30.pdf
Download (492kB)
Abstract
மனிதன் உயிர்வாழ அவசியமானது உணவு. உணவு இல்லையேல் உயிர்கள் வாழ முடியாது. அதனால்தான் உணவு கொடுத்தவர்களே உயிர் கொடுத்தவர் என்று புறநானூறு கூறுகிறது. இதனை,
"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே"புறம்18
என்ற அடிகளில் அறிய முடிகிறது. இந்த உணவின் தன்மை இடத்திற்கேற்பவும், சூழலுக்கேற்பவும் மாறுகிறது. அனைவரும் ஒரே மாதிரியான உணவை உண்பதில்லை. மக்கள் அவர்களுக்கு எளிதில் கிடைக்கும் உணவுப்பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை அதிகம் உண்கின்றனர். அவர்களுக்குக் கிடைக்காத உணவுப்பொருட்களை மற்றோர் இடத்திலிருந்து வாங்கி அதனையும் பயன்படுத்துகின்றனர். உணவு இல்லையேல் மனிதன் மிகவும் துன்பப்படுகிறான். அவனுடைய ஒழுக்கம் முதலான குணங்கள் மாறிவிடுகின்றன. இதனை ஔவையார்,
'மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை. தானம், தவம் உயர்ச்சி தானாண்மை தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப்போம் பறந்து.''நல்வழிநாற்பது.40
என்று கூறுகிறார். எனவே, பசியை ஒரு நோயாக நம் முன்னோர்கள் எண்ணினர். சிறுகுடி கிழான்பண்ணன் என்ற வள்ளலின் இல்லத்தை குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் "பசிப்பிணி மருத்துவன் இல்லம்" என்று கூறியிருப்பதும் இங்கு எண்ணத்தக்கது.
பசியின் கொடுமைகளைப்பற்றி மணிமேகலையும், இன்னும் பல இலக்கியங்களும் இயம்புகின்றன.
மக்களுக்குத் தேவையான அடிப்படைப் பொருள்களான உணவு, உடை, உறையுள் இவற்றில் உடை, உறையுள் இல்லாமல் கூட உயிர் வாழலாம். ஆனால் உணவின்றி உயிர்வாழவே முடியாது எனவே மனிதனின் முதல் தேடல் முயற்சியாக உணவு இருந்தது. பழங்கள். காய்கறிகளைத் தொடக்க காலத்தில் உண்ட மனிதன் படிப்படியாக உணவைச் சமைக்கவும் அதனைப் பண்படுத்தவும் கற்றிருக்கலாம். உணவைச் சமைக்க ஆரம்பித்து உணவில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்திய மனிதர்கள் பின்னர் பிறநாட்டு உணவு வகைகளையும் அறிந்து கொண்டனர்.இதில் அவர்கள் பயன் படுத்தும் தாவரங்கள் பற்றிய இக்கட்டுரையில் காணலாம்.
| Item Type: | Article |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | Mr IR Admin |
| Last Modified: | 20 May 2026 06:15 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/20431 |
