பன்முகப் பார்வையில் பாரதிதாசன் படைப்புகள்
Prakash, M and Santhalakshmi, M (2026) பன்முகப் பார்வையில் பாரதிதாசன் படைப்புகள். Today International Journal: 63. pp. 384-394. ISSN 2349-1914
Prakash&Santha-25.03.2026.pdf
Download (3MB)
Abstract
தமது கவிதைகள், நாடகங்கள், புதினங்கள், கட்டுரைகள், சிறுகதைகள் என எண்ணற்ற படைப்புகளால் சமூகத் தொண்டாற்றியவர், செந்தமிழ்த் தேனியின் தாசன் பாரதிதாசன். எண்ணியதை எண்ணியபடி வெளிப்படுத்தும் படைப்புகளில் மிகச் சிறந்தபடைப்பு, சிறுகதைகள். சிறுகதைகள் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பவை. எளியோரும் வலியோரும் புரிந்து கொள்ளும் விதத்தில் அமைபவை. அத்தகைய சிறுகதைகளில் வாழ்க்கை விழுமியங்கள் மூலம் வாழ்க்கையைப் பயனுள்ளதாக மாற்ற முடியும் என்பதைத் தம் சிறுகதைகள் மூலம் பாவேந்தர் விளக்கியுள்ளார்.
ஆழி சூழ் உலகிலே ஆர்ப்பரிக்கும் வாழ்க்கை ஓட்டத்தில் மறந்து போன வாழ்க்கை விழுமியங்களைப் பாமரனும் புரிந்துகொள்ளும் வகையில் இனிய எளிய நடையில் சிறுகதைகளாக அளித்து சிறப்பு செய்தவர் பாவேந்தர் அவர்கள். பாவேந்தர் தனது சிறுகதைகள் மூலம் எடுத்துரைத்த வாழ்க்கை விழுமியங்கள், எல்லா காலங்களுக்கும் பொருந்தக் கூடியதாக உள்ளன. தோன்றுவதும் மறைவதும் எல்லா உயிர்களுக்கும் பொதுவானது என்றாலும் பின்பற்றும் விழுமியங்கள் மூலம் வாழ்க்கையைப் பயனுள்ளதாக மாற்ற முடியும் என்பதைத் தம் சிறுகதைகள் மூலம் பாவேந்தர் பாங்காக அளித்துள்ளார். பாரதிதாசன் தம் சிறுகதைகள் மூலம் அளித்துள்ள விழுமியங்களை வாழ்வில் கடைப்பிடித்தால் அச்சமின்றி உச்சத்தை தொட முடியும்.
| Item Type: | Article |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | Mr IR Admin |
| Date Deposited: | 18 May 2026 12:20 |
| Last Modified: | 27 Aug 2026 10:35 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/20131 |
