குறிஞ்சித்தேன்நாவல் காட்டும் கதை மாந்தர்கள்
KAMALA, K (2026) குறிஞ்சித்தேன்நாவல் காட்டும் கதை மாந்தர்கள். கனைச்சுடர்ஆய்விதழ. ISSN 978-93-5996-390-7
குறிஞ்சித்தேன்நாவல் காட்டும் கதை மாந்தர்கள்.docx
Download (35kB)
Abstract
காலத்தால் முதுமையையும் கருத்தினில் வளமையையும் எடுத்துரைப்பதில் இனிமையையும் பெற்றுத் திகழும் பெருமை வாய்ந்த செம்மொழியாகத் திகழ்வது நம்தமிழ் மொழியாகும். சமுதாய உறவுகளையும் அவற்றினின்று பிறக்கின்ற மனித மன இயக்கங்களையும் இவை ஒன்று கூடி சமுதாய மனவியலாகச் சமுதாயத்தையே மாற்றும் உளவியல் சக்தியாக உருவாவதையும் உரைநடை தெளிவாக விவரிக்கும் வலிமையுடையது. அவ்வகையில் இருபதாம் நூற்றாண்டில் கவிதை, சிறுகதை, புதினம், நாடகம் என்று பல இலக்கிய வடிவங்கள் வெளிப்பட்டன. சிறுகதை ஒரு செய்தித் துளியின் விளக்கமாகவே அமையும். ஆனால், புதினம் ஒரு சமூகம் முழுவதையும் படிப்பவர் முன்வைக்கும் ஆற்றல் பெற்றது. இருபதாம் நூற்றாண்டு இலக்கிய வகைகளில் புதினத்திற்கு முக்கியமான ஓர் இடமுண்டு. மக்களின் வாழ்வியல், பண்பாட்டு மரபுகள் மற்றும் சமுதாயப் பிரச்சினைகளை எடுத்துரைப்பதிலும் முன் நிற்பதால் இலக்கிய உலகில் மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது புதினங்கள் என்றால் மிகையாகாது. புதினத்தின் பல்வேறு கூறுகளில் பாத்திரப் படைப்பு இன்றியமையாததாகும். புதினம் என்பது பல தரப்பட்ட மக்களின் வாழ்க்கைச் சித்திரமாக அமைகின்றது. அதன் சிறப்பு அதில் படைக்கப்படும் பாத்திரங்களைப் பொறுத்ததாகும். அந்த வகையில் குறிஞ்சித்தேன் நாவலில் இடம்பெறும் முதன்மைப் பாத்திரங்களான ஜோகி, கிருஷ்ணன், ரங்கன், பாரு , கௌரி ஆகியோரைப் பற்றி இக்கட்டுரையில் ஆய்வுச் செய்யப்படுகிறது.
| Item Type: | Article |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | IR Admin |
| Date Deposited: | 27 Aug 2026 05:32 |
| Last Modified: | 27 Aug 2026 05:36 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/18916 |
