பாட்டினத்தார் பாடல் கூறும் வாழ்வியல்
Vidhya kumari, S and Dr. Priya, S (2025) பாட்டினத்தார் பாடல் கூறும் வாழ்வியல். In: உலகச் சமயங்களும் தமிழ் இலக்கிய வளர்ச்சியும், 01.02.2025, International Institute of Tamil Studies,Tharamani, Chennai-113..
பட்டினத்தார் கூறும் வாழ்வியல்.pdf
Download (707kB)
Abstract
பகுத்தறிவு என்பது நன்மை, தீமை, உண்மை நிலைகளை அறிவதாகும். இது எதையும் தள்ளாது அல்லது கொள்ளாது சீர்தூக்கிச் செயல்படும் அரசும் நாடும் உண்டாக்க முயலும் சகோதரத்துவத்தை சமதர்மத்தை தம் பாடலில் வழியாக உணர்த்தி காட்டுபவர்களே சித்தர்களாவர். இவர்களில் அறிய தத்துவச் சுடராய் வாழ்ந்தவர் பட்டினத்தார் ஆவார் . "காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே" என்ற ஞானமுதிர்ச்சியின் வெளிப்பாட்டை அவரின் பாடல்களின் வழி அறியலாம். இவருடைய பாடல்கள் வாழ்வில் சிந்தனைகளை பலவாறு எடுத்துரைத்துள்ளன அறிவையும் அனுபவத்தையும் ஒரு சேர இணைத்து மெய் உணர்வின் மிகுதியால் மனித இனம் சிறக்க இவர் அருளிய பாடல்கள் ஏராளம். வாழ்க்கை என்பது கானல் நீரைப் போன்றது என்பதும் மனிதனின் உடல், இளமை, செல்வம் நடைமுறை முதலிய அனைத்தும் மாறுதல்களுக்கு உட்பட்டது என்றும் பட்டினத்தார் தெள்ளிதின் கண்டு உரைத்துள்ளார்.அவ் வகையில் இவர் தம் படைப்புகள் வாழ்வியலையும் மனிதத் தன்மையும் உணர்த்துவதாக அமைந்துள்ளன. பட்டினத்தார் பாடல்களின் வழி நிலையாமை, வாழ்வியல் நற்பண்புகள் ஆகியவற்றை எடுத்துரைப்பதாக இக்கட்டுரையின் களம் அமைகின்றது.
| Item Type: | Conference or Workshop Item (Paper) |
|---|---|
| Additional Information: | ISBN Num. 978-81-985463-8-8 |
| Domains: | Tamil |
| Depositing User: | Mr IR Admin |
| Last Modified: | 12 May 2026 08:46 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/18756 |
