உலகெலாம் உணர்ந்து ஓதற்கரிய வீரசைவம்
Chellapandian, P and Pannirukaivadivelan, R (2025) உலகெலாம் உணர்ந்து ஓதற்கரிய வீரசைவம். In: 19ஆம் பட்டம் குருமகா சந்நிதானம் நூற்றாண்டு விழா ஆய்வுக்கோவை, 17 - 18.10.2025, Pondicherry University.
19th Swamji Aaivukkovai Vol. 2 Final (14.10.25).pdf
Download (20MB)
Abstract
ஆய்வின் தேவையும் எல்லையும்
சிவனாரின் பஞ்சமுக வெளிப்பாடான சிவலிங்க தோற்றத்திலிருந்து உருவத்திருமேனியாக வெளிப்பட்ட பஞ்சாச்சாரியார்கள் மூலம், ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, நேப்பாளம் உட்பட்ட உலகெலாம் வீரசைவத்தை பரப்புதற்கு, வருணாசிரமமற்ற மொழி-இன-நிறம்-பேதமற்ற சிவனியம் என்ற ஒளிவடிவமாய் கடவுளுடைய சுயமாக் வீரசைவம் தோன்றியுள்ளது.
பிற்காலத்தில் தோன்றிய கிறித்துவம், முகமதியம், இசுலாமியம், சமணம், பௌத்தம் செயல்பாட்டினால், வீரசைவத்திலிருந்து உருமாறிய சித்தாந்த சைவம், அடிப்படையான/ ஆழமான காவர்த்தமானத்தினை மறைக்கப்பட்ட உண்மையை உள்ளுணர்ந்து, சமத்துவ சமயமாக ஒன்றேகடவுள் என்ற மனிதகுலத்தில் எந்தவித ஏற்றத்தாழ்வு இல்லாமல், சமநிலை நோக்குடன் உருவாக்கப்பட்டது வீரசைவம்.
பிற்கால மாற்றலால், வரலாற்றை சிதைத்தும் / மறைத்தும் / மறைக்கப்பட்டும், தற்போதும் வீரசைவ உயிர்மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த சம்பிராதய அடையாளம் கொண்ட குருமார்பு சார்ந்த எம்முள் ஒளிவிடும் சிவனார் ஒளிஉருவமே, இந்த உண்மையை எழுதத் தூண்டிய மூலமாகும்.
பண்டைக்கால தொல்பொருள் ஆராய்ச்சி இடமான மொஞ்சதோரா, ஹரப்பா ஆகிய இடங்களில் நடைபெற்ற புதைபொருள் ஆராய்ச்சியில் சிறுசிறு சிவலிங்கங்கள் தோன்றி வருவதால்- உலகெலாம் வீரசைவம் பரவியுள்ளது என்தை உறுதியாக அறியலாம்.
மூவுலகமும் அறியப்பட்ட எல்லையில்லா உலகத்தில், அனைத்து பகுதிகளிலும் சிவலிங்கங்கள் வெளிப்பட்டு கொண்டுள்ளது. இதுவே உலகளாவிய மூத்தசமயம் வீரசைவம் என்பது உறுதியாக தெரிவதால், சீரசைவத்தில் எல்லையில்லை என்பதை சற்றும் யோசிக்காமல் கருதலாம்.
| Item Type: | Conference or Workshop Item (Paper) |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | Mr IR Admin |
| Date Deposited: | 11 May 2026 06:04 |
| Last Modified: | 11 May 2026 06:08 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/16058 |
