தமிழ் இலக்கிய வரலாற்றில் வில்லுப்பாட்டு சார்ந்த பதிவுகள்
Mohanalekshmi, A and Markandan, C (2026) தமிழ் இலக்கிய வரலாற்றில் வில்லுப்பாட்டு சார்ந்த பதிவுகள். ARIMA NOKKU, 20:1. pp. 63-66. ISSN 2320-4842
தமிழ் இலக்கிய வரலாற்றில் வில்லுப்பாட்டு சார்ந்த பதிவுகள்.pdf - Published Version
Download (6MB)
Abstract
வில்லுப்பாட்டு தமிழன் தன் தொன்மைக் கலைகளுள் ஒன்றாக விளங்குகின்றது. நாட்டுப் பாடல் வகைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இயலும், இசையும் நாடகமும் கலந்த முத்தமிழால் வெளிப்படும் கலைகளில் முதன்மையானதாகத் திகழ்கின்றது. பெரிய வில் போன்ற இசைக்கருவி பக்கத்திலே துணையாகப் பிற இசைக்கருவிகள் இருக்கும். வில்லுப்பாட்டு பாடுபவர் தந்தனத்தோம் எனத் தொடங்கி வில்லை இனிய ஓசையால் எழுப்பி பார்ப்போரையும் கேட்போரையும் மகிழ்விக்கும் அற்புதக்கலை. வில்லைக் கையில் உடையவர் பாட்டின் ஒரு பகுதியைப் பாட பக்கத்தில் இருப்பவர் அதனைத் திரும்பச் சொல்லி கதை வடிவில் பாடப் பெறும் பாடல் வகை. இவ்வகையால் கடவுள் கதைகளும், புராணக்கதைகளும், சமூகசீர்திருத்த கருத்துக்களும், சமூகமுற்போக்கு சிந்தனைகளும் மக்களுக்கு எளிமையாக வில்லுப்பாட்டின் மூலம் விளக்கப்பட்டன. முக்கூடற்பள்ளு போன்ற இலக்கியங்களிலும் 'வில்லடிப்பாட்டு' எனக்குறிப்பிடப்படுவது இதன் பழமையைக் காட்டுகிறது.
| Item Type: | Article |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | IR Admin |
| Date Deposited: | 01 Sep 2026 11:53 |
| Last Modified: | 01 Sep 2026 11:54 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/15905 |
