சுடர்தொடீஇ கேளாய்!

Durgadevi, K (2026) சுடர்தொடீஇ கேளாய்! 1 ed. நவீனக் கவிதை, 1 (1). விண்ணொளிப் பதிப்பகம், Chennai. ISBN 978-629-94386-2-5

[thumbnail of Front - 09.04.26 (1).pdf] Text
Front - 09.04.26 (1).pdf

Download (472kB)

Abstract

சங்ககாலத்தில் பெண்களின் திறமையும் ஆளுமையும் மேலோங்கி இருந்தது. மதிக்கப்பட்டனர். வணிகம் முதற்கொண்டு அனைத்திலும் பெண்களின் பங்கு மிகுதியாக இருந்தது. நாட்டை ஆளும் அரசனாக இருந்தாலும் எவ்வித அச்சமும்மின்றி அவர்களது தவறைச் சுட்டித் திருத்தும் திறனைப் பெண் புலவர்கள் பெற்றிருந்தனர். பெண்கள் பெரிதும்

அதியமான் நெடுமான் அஞ்சியின் புகழை "கடுமான் தோன்றல்" புறநானூறு 95) என எடுத்துக்கூறித் தொண்டைமானுக்கும் அதியமானுக்கும் இடையில் நடக்கவிருந்த போரினைத் தடுக்கும் திறன் ஔவையிடம் இருந்தது.

பொன்முடியார் எனும் புலவர் "ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே" (புறநானூறு 312) எனத்தொடங்கி தந்தைக்கு, அரசனுக்கு, நாட்டின் குடிமகனுக்கு என ஒவ்வொருவருக்குமான கடமைகளை எடுத்துக்கூறுகிறார்.

காவற்பெண்டு எனும் புலவர் "புலிசேர்ந்து போகியகல் அளை போல" (புறநானூறு 86) என தன் வயிறினைக் காட்டி அவ்வகையில் சாதனைப் புரிந்துவரும் பெண்களில் ஏழுபருவங்களில் (பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்) பருவங்களுக்கு ஒருவராகத் தேர்ந்தெடுத்து அவர்கள் சாதனைப் பெண்களாய்த் திகழ அவர்கள் கடந்து வந்த சவால்கள், சோதனைகள் மற்றும் அவர்களது குணநலன்களைப் புத்தாக்கச் சிந்தனையில் புதுக்கவிதை வடிவில் தருவதே இந்நூலின் நோக்கமாக அமைந்துள்ளது.

"சுடர் தொடீஇ! கேளாய்!" எனும் இந்நூல் நவீன காலப் பெண் சாதனையாளர்களின் வாழ்க்கையுடன் இணைத்து, பெண் என்பது வயதின் வரையறை அல்ல; அவள் சக்தியின் வெளிப்பாடு" என்பதை சுட்டுகிறது. சிறுமி முதற்கொண்டு பேரிளம்பெண்கள் வரையிலானப் பெண்களின் முயற்சி, சமூகப் பொறுப்பு, தேசிய உணர்வு ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. இந்நூல் பெண்களை முன்னோடிகளாகப் பார்க்கும் பார்வையைச் சமூகத்திற்குக் காட்டுகிறது. சக்தியின் பரிணாமப் பயணத்தை பெண் புத்தாக்கச் சிந்தனையுடன் உரைநடைக் கவிதை முறையில் அமைந்துள்ளது.

"சுடர் தொடீஇ! கேளாய்!" பெண் பருவங்களை வெறும் உயிரியல் வளர்ச்சியாக அல்லாமல், 'உளவியல்-சமூக-ஆன்மீக எழுச்சியின் நிலைகளாக' படிப்போரின் உள்ளங்களுக்கு எடுத்துக்கூறும் விதத்தில் எழுதப்பட்டுள்ளது.

Item Type: Book
Subjects: Tamil > Tamil
Domains: Tamil
Depositing User: IR Admin
Date Deposited: 28 Aug 2026 07:47
Last Modified: 28 Aug 2026 07:48
URI: https://ir.vistas.ac.in/id/eprint/15889

Actions (login required)

View Item
View Item