கண்ணதாசன் பாடல்களில் எம்.ஜி.ஆர் ஆளுமை

Thenmozhi, DR.D (2025) கண்ணதாசன் பாடல்களில் எம்.ஜி.ஆர் ஆளுமை. In: கண்ணதாசன் பாடல்களில் எம்.ஜி.ஆர் ஆளுமை, July 18 2025, Karaikudi.

[thumbnail of kannadhasan padalgalil mM.G.R Aalumai.pdf] Text
kannadhasan padalgalil mM.G.R Aalumai.pdf - Published Version

Download (8MB)

Abstract

கண்ணதாசன் என்ற ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுக்க பொறுமை வேண்டும். மேலோட்டமாக வலை வீசி மீன் பிடிப்பதனால் உடனுக்குடன் செய்துவிடலாம். முத்தெடுக்க பொறுமையுடன் மூச்சடக்கி நீண்ட நேரம், பலமுறை முயற்சி செய்யவேண்டும். பரந்த கடல் மேல் பரவும் மேகம் அதன் நீரை தனக்குள் இழுத்துக்கொள்கிறது. பிறகு நீராக உள் வாங்கியதை மழையாகப் பொழிகிறது. அதைப் போலத்தான் கண்ணதாசன் என்னும் மேகம் தமிழாகிய கடலில் தான் உட்கொண்டவற்றைத் தன் பாடல் வரிகளில் எளிய மொழியில் மழையாகப் பொழிந்து தள்ளுகிறது. எம்.ஜி.ஆர்-க்கு உள்ள தனிப்பட்ட சிறப்பு தன்னைப் போற்றுவோருக்கு மட்டுமின்றி, கடுமையாக தூற்றுவோருக்கும் உதவிகள் செய்வார். சொல்லப் போனால், தன் மீது கல் வீசுவோருக்கு கனி தரும் மரம் போல, தன்னைக் கடுமையாக தாக்கிப் பேசுவோருக்கு அதிகமாகவே உதவுவார். அவர்கள் திறமையாளர்களாக இருந்துவிட்டால் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, அவர்களின் திறமைக்கு உரிய கவுரவமும் அங்கீகாரமும் அளிப்பார். இத்தகைய இருவரின் உன்னத தன்மையில் கண்ணதாசன் பாடல்களில் எம்.ஜி.ஆரின் ஆளுமை எங்ஙனம் இருந்தது என்பதை விளக்கும் வகையில் இக்கட்டுரை அமைகிறது.

Item Type: Conference or Workshop Item (Paper)
Subjects: Tamil > Tamil
Domains: Tamil
Depositing User: IR Admin
Date Deposited: 27 Aug 2026 08:51
Last Modified: 27 Aug 2026 08:52
URI: https://ir.vistas.ac.in/id/eprint/15295

Actions (login required)

View Item
View Item