இன்பியல் சிந்தனைகளில் நகை

Thenmozhi, DR.D (2025) இன்பியல் சிந்தனைகளில் நகை. In: THIRUKURAL WORLD RECORD CONFERENCE, JAN 2025, QUEEN MARYS CHENNAI.

[thumbnail of INBIYAL SINTHANAIKALIL NAGAI.pdf] Text
INBIYAL SINTHANAIKALIL NAGAI.pdf - Published Version

Download (8MB)

Abstract

ஆய்வுச் சுருக்கம்

வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்ச்சிகளில் தோன்றும் சுவைகளைக் கவிஞன் மிகத் தெளிவாகவும், விளக்கமாகவும், தன் கவிதைகளில் எடுத்தாண்டிருக்கும் முறைகளில், அவன் காட்டும் தோற்றங்களில் நாம் ஒன்றி விடுகிறோம். நாம் நேரில் அனுபவிக்கும் பொழுது நம் சிந்தனையைச் செலுத்த முற்படுபடுகிறோம்; சுவைகளின் பயன் கிடைக்கிறது. உணவின் தரத்தை நாவின்சுவையால் மதிப்பிடுவது போலவே, இலக்கியத்தின் தரத்தையும் உணர்வுச் சுவையால் மதிப்பிடுகிறோம். பலமுறை படிக்கிறோம்; பொருளை உணர்கிறோம்; மொழி நடை, அணி, அமைப்பை ஆராய்கிறோம். அப்பாடற் சுவையின் அளவிற்கு ஏற்ப, அப்பாடலின் மதிப்பும் நம் மனத்தில் உருவாகிறது. மனதிற்கு இன்பத்துப் உலகலாவிய இன்பியல் சிந்தனைகளில், 'நகை' என்கின்ற உயர்ந்த உணர்வை இன்பத்தைத் தரும் நகைச்சுவையை முதன்மையாக அமைத்துக் காட்டி அருமையான செய்திகளை எல்லாம் திருவள்ளுவனார் நமக்குச் சொல்லி வைத்த குறள்களின் மூலம் விளக்க இக்கட்டுரை முற்படுகிறது.

Item Type: Conference or Workshop Item (Paper)
Subjects: Tamil > Tamil
Domains: Tamil
Depositing User: Mr IR Admin
Last Modified: 12 May 2026 07:05
URI: https://ir.vistas.ac.in/id/eprint/15137

Actions (login required)

View Item
View Item