சமுதாய நோக்கில் சிங்கப்பூர் தமிழ்ச்சிறுகதைகள்

Thenmozhi, DR.D (2025) சமுதாய நோக்கில் சிங்கப்பூர் தமிழ்ச்சிறுகதைகள். AYUDA EZHUTHU, 13. pp. 33-38. ISSN 2278-7550

[thumbnail of 7. சமுதாய நோக்கில் சிங்கப்பூர் தமிழ்ச்-முனைவர் தே.தேன்மொழி.pdf] Text
7. சமுதாய நோக்கில் சிங்கப்பூர் தமிழ்ச்-முனைவர் தே.தேன்மொழி.pdf - Published Version

Download (2MB)

Abstract

ஆய்வுச் சுருக்கம்

இலக்கியப் சிங்கப்பூர்த் தமிழ் படைப்பாளிகளில் தொடக்கத்தில் தமிழ்நாட்டிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் எழுதினர். தற்போது, சிங்கப்பூரிலேயே பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வருபவர்கள் எழுதத் தொடங்கி உள்ளனர். மேலும் பணி நிமித்தம் குடியேறி வாழ்பவர்களும் இலக்கியத்தில் தடம் பதித்து வருகின்றனர். எனவே மலேசியத் தமிழ் இலக்கியத்தைவிட சிங்கப்பூரில் தமிழ் நவீனப்பட்டுள்ளது எனலாம். குறிப்பாகத் தொழில் நுட்பம் பயின்றோர். இணைய வெளியில் தொழில் புரிவோர் இலக்கியப் படைப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்றைய சிங்கப்பூர் வாழ்வை, மனித உறவுகளை, பல் இன, மொழிச்சூழலை பெருநகர நிலைமைகளை சந்தை நுகர்வை, இயந்திர, தொழில்நுட்பப்பரவலை, மரபு நேர்ச்சிகளை பதிவு செய்யும் முயற்சிகளே சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியமாக அமையும். சிங்கப்பூர் எழுத்தாளர்களால் எழுந்த பல சிறுகதைகளில் சமுதாய நோக்கு மிளிர்வதைக் காணலாம். உதாரணத்திற்கு, மனிதனின் முறையற்ற வாழ்க்கை முறை, காலத்திற்கு ஏற்பத் தன்னை மாற்றிக்கொள்ளும் திறன், ஆணாதிக்கம், பெண்ணடிமை, குடி பெயரும் மக்களின் மனநிலையும் நிலைப்பாடும் போன்ற பலவற்றைக் கருப்பொருள்களாகக் கொண்டு ச.உதுமான் கனி, சுப்ரா, மா.இளங்கண்ணன், இராம. கண்ணபிரான் போன்ற எழுத்தாளர்கள் தங்கள் சிறுகதைகளைப் படைத்துள்ளார். இத்தகையச் சிறுகதைகளில் வெளிப்படும் சமுதாயம் சார்ந்த செய்திகளை ஆராயும் வகையில் இக்கட்டுரை அமைகிறது.

திறவுச்சொற்கள்: சமுதாயம், புலம்பெயர்தல், பெண்ணடிமை, சிறுகதை, சிங்கப்பூர், ஆணாதிக்கம், பகுத்தறிவு.

Item Type: Article
Additional Information: ISSN 2278-7550
Subjects: Tamil > Tamil
Domains: Tamil
Depositing User: Mr IR Admin
Date Deposited: 27 Aug 2026 08:58
Last Modified: 27 Aug 2026 08:58
URI: https://ir.vistas.ac.in/id/eprint/15085

Actions (login required)

View Item
View Item