பெரியபுராணத்தில் பண்பாட்டு விழுமியங்கள்
Thenmozhi, DR.D (2025) பெரியபுராணத்தில் பண்பாட்டு விழுமியங்கள். In: Periya Puranathil kalaikalum panpattu koorukalum, 31-05-2025, Pondicherry.
பெரிய புராணத்தில் பண்பாட்டு விழுமியங்கள் 2025.pdf - Published Version
Download (3MB)
Abstract
தமிழகப் பண்பாட்டு விழுமியங்களை நன்கு புலப்படுத்தும் சைவத்தமிழ் இலக்கியங்களுள் சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம் என வழங்கும் திருத்தொண்டர்புராணம் தனிச்சிறப்புடையதாக விளங்குகின்றது. பன்னிரு திருமுறைகளுள் பன்னிரண்டாம் திருமுறையாக வகுக்கப்பெற்றுள்ள இப்புராணம் சிவனடியார்களின் வாழ்வியலையும் சைவப்பண்பாட்டினையும் புலப்படுத்தும் சைவத்தமிழ்க் காப்பியமாகத் திகழ்கின்றது. உள்ளத்தாலும் உணர்வாலும் சொல்லாலும் செயலாலும் தூய்மை கொண்ட சிவனடியார்களின் வரலாற்றை மக்கள் அறிந்து அவர்கள் வாழ்ந்து காட்டிய நற்பண்பாட்டு விழுமியங்களைப் பின்பற்றுவதன் வாயிலாகத் தாமும் சமுதாயத்திற்குப் பெரும் பணியாற்ற முடியும் என்ற குறிக்கோளுடன் பெரியபுராணம் எனும் பண்பாட்டுப் பனுவலைச் சேக்கிழார் வழங்கியுள்ளார். இத்தகைய பெரியபுராணத்தில் இடம்பெற்றுள்ள பண்பாட்டு விழுமியங்களை இனங்காணுவதை இக்கட்டுரை முன்னெடுக்கிறது.
| Item Type: | Conference or Workshop Item (Paper) |
|---|---|
| Additional Information: | ISBN 978-81-910199-7-1 |
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | Mr IR Admin |
| Last Modified: | 12 May 2026 07:45 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/15045 |
