எம்.ஜி.ஆர். திரைவசனங்களில் அறம்
Thenmozhi, DR.D and RameshBabu, k.m (2025) எம்.ஜி.ஆர். திரைவசனங்களில் அறம். AYUDA EZHUTHU, A Peer Reviewed International Journal of Tamil Studies, 13. pp. 48-51. ISSN 2278-7550
ஆயுத எழுத்து UGC Journal எம்.ஜி.ஆர் திரை வசனங்களில் அறம் (இரமேஷ் பாபு)2025.pdf - Published Version
Download (637kB)
Abstract
ஆய்வுச் சுருக்கம்
எம்.ஜி.ஆர். தமிழ் திரை உலகில் நடிகராக மட்டுமின்றி, அறம், ஈகை, மனிதநேயம் ஆகியவற்றைத் தம் திரைவசனங்களின் வழி மக்களிடம் கொண்டு சென்றவராகத் திகழ்கிறார். புராணக் கதைகளின் தாக்கத்தால் ஒரே மாதிரியாகச் சுழன்றுகொண்டிருந்த தமிழ் சினிமாவுக்கு புதிய உயிரூட்டலாக அவர் வழங்கிய வசனங்கள் அமைந்தன. “வசனங்களில் கூர்மையும் இரசனையும்” எனக் காலத்திய விமர்சகர்கள் பாராட்டியது, அவரது வசனங்களில் உள்ள அறச் சிந்தனைக்காகவே ஆகும். பெருமுறையார், நாலடியார், குறுந்தொகை முதலிய நூல்களில் "ஈகை" உயர்ந்த பண்பாகக் கூறப்பட்டுள்ளது. அவை போன்று எம்.ஜி.ஆர். வசனங்களும் வறியோரைத் தாங்கும், தன்னலமற்ற கொடைச் சிந்தனையை மக்களுக்கு பரப்பின. கருச்சொற்கள் : ஈகை, வசனங்கள், திரை வசனம், மன்னன்
| Item Type: | Article |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | Mr IR Admin |
| Date Deposited: | 27 Aug 2026 09:05 |
| Last Modified: | 27 Aug 2026 09:06 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/14931 |
