சிவ பாலய சித்தர் தொன்மை

Thenmozhi, DR.D (2025) சிவ பாலய சித்தர் தொன்மை. In: THAMIZH GURUNERI MARABUM SIVAGANIYUM, 17-10-2025,18-10-2025, Puduvai University,Puthucherry.

[thumbnail of சிவ பால்ய சித்தர் தொன்மை - மயிலம் கல்லூரி 2025.pdf] Text
சிவ பால்ய சித்தர் தொன்மை - மயிலம் கல்லூரி 2025.pdf - Published Version

Download (2MB)

Abstract

ஆய்வுச் சுருக்கம் : சித்தர் மரபு என்பது தமிழரின் ஆன்மிக, மருத்துவ, யோக மற்றும் ஞான மரபுகளின் அடையாளமாக விளங்குகின்றது. பொதுவாக பதினெட்டு சித்தர்கள் மட்டுமே அறியப்பட்டாலும், காலப்போக்கில் சித்தர் மரபு விரிவடைந்து நூற்றுக்கும் மேற்பட்ட சித்தர்களின் வரலாற்றுச் செய்திகள் வெளிப்பட்டுள்ளன. குறிப்பாக புதுச்சேரி பகுதி பல சித்தர்கள் தவமிருந்து சமாதியடைந்த ஞானபூமியாக விளங்குகிறது. கடந்த ஐந்நூறு ஆண்டுகளில் புதுச்சேரியில் வாழ்ந்த முப்பத்திரண்டு சித்தர்களின் வரலாறு, அப்பகுதியின் ஆன்மிகச் சிறப்பை எடுத்துக்காட்டுகின்றது.
இவ்வாய்வு, புதுச்சேரி அருகிலுள்ள பொம்மயபாளையத்தில் தோன்றிய சித்தரால் நிறுவப்பட்ட மயிலம் பொம்மபுர ஆதீனத்தின் தோற்றம், அதன் வீரசைவ மரபு, தமிழ் வளர்ச்சிப் பணி மற்றும் ஆன்மிகப் பண்பாட்டு அடையாளங்களை ஆராய்கிறது. மேலும், ஆதீன உருவாக்கத்திற்குக் காரணமான சிவகணத் தொன்மைப் பதிவுகளையும் இக்கட்டுரை வெளிக்கொணர்கிறது. ஆதீனங்கள் தமிழ் மொழி, சைவ சமயம் மற்றும் பக்தி மரபுகளைப் பாதுகாத்து வளர்த்த விதத்தையும் இவ்வாய்வு விளக்குகிறது.
திறவுச்சொற்கள்: சித்தர்கள், புதுச்சேரி, மயிலம் பொம்மபுர ஆதீனம், வீரசைவம், சிவகணம், தமிழ் வளர்ச்சி, ஆதீன மரபு, சைவ சமயம், ஆன்மிகம், தொன்மைப் பதிவுகள்.

Item Type: Conference or Workshop Item (Paper)
Additional Information: ISBN : 978-93855082-8-6
Subjects: Tamil > Tamil
Domains: Tamil
Depositing User: Mr IR Admin
Last Modified: 12 May 2026 07:25
URI: https://ir.vistas.ac.in/id/eprint/14862

Actions (login required)

View Item
View Item