உவமையில் சிறந்தவன் கம்பன்

Dr.Priya, S (2026) உவமையில் சிறந்தவன் கம்பன். Narunthamizh E-Journal, 1: 3. pp. 31-38. ISSN 978-93-5810-640-4

[thumbnail of உவமையில்-சிறந்தவன்-கம்பன்..pdf] Text
உவமையில்-சிறந்தவன்-கம்பன்..pdf

Download (440kB)

Abstract

கம்பராமாயணம் ஒரு தேன் கூடு என்றால் அது மிகையாகாது. தேன் கூட்டை பிழியப் பிழிய வரும் தேன் போல மனித வாழ்வியலின் நுட்பங்களையெல்லாம் நம் கைவண்ணத்தால் பக்தி சிறப்பிப்பிலும் கதையமைப்பிலும் சிறந்து விளங்குகின்ற இராமகாதையில் அமைத்து அழகுக்கு அழகுச் செய்தார் போல விருத்தம் என்னும் பாவகையில் சொல்லையும் பொருளையும் உவமையினையும் பிற அணிவகைகள் கற்பனை வளம் பொருந்தி வரும்படி சந்தத்தோடு இணைந்து கம்பர் பாடியதால் தான் ஏனைய மொழி இராமாயணங்களை விடவும் இக்காவியம் சிறந்து விளங்குகிறது. சந்தனத்தை தொட தொட கை மணப்பது போல கம்பராமாயணத்தைப் பயிலும் தோறும் நெஞ்சமும் இனிக்கவே செய்கிறது. அவ்வகையில் இந்நூலில் பயின்று வந்துள்ள உவமைகள், கம்பனின் இலக்கண உத்தி முறையையும் அவனது ஆழ்ந்து அகன்ற அறிவின் திறனையும் எடுத்துக்காட்டும் மிகச்சிறந்த வாயில்களாக திகழ்கின்றன. 'உவமையில் சிறந்தவன் கம்பன்' என்னும் கருத்தின் அடிப்படையில் என் நூலில் கையாளப்பட்டுள்ள உவம உருபுகளை இனங்கண்டிருக்கும் தொல்காப்பியரின்உவமவியல் சார்ந்த அறிவுத் திறனைக் கம்பரின் படைப்பிலும் காண முடிகிறது.

Item Type: Article
Domains: Tamil
Depositing User: Mr IR Admin
Date Deposited: 10 May 2026 11:49
Last Modified: 13 May 2026 07:38
URI: https://ir.vistas.ac.in/id/eprint/14602

Actions (login required)

View Item
View Item