தமிழ் நாவலின் வரலாறும் தன் வரலாற்று நாவலின் தோற்றமும்

Prakash, M and K, KowsalyaDevi and UNSPECIFIED1 (2026) தமிழ் நாவலின் வரலாறும் தன் வரலாற்று நாவலின் தோற்றமும். Today International Journal: 62. pp. 375-383. ISSN 2349-1914

[thumbnail of தமிழ் நாவலின் வரலாறும் தன் வரலாற்று நாவலின் தோற்றமும்.pdf] Text
தமிழ் நாவலின் வரலாறும் தன் வரலாற்று நாவலின் தோற்றமும்.pdf

Download (1MB)

Abstract

தமிழ் இலக்கிய மரபு தொன்மையான வரலாற்றை உடையது. சமூக மாற்றத்திற்கு ஏற்ப வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் காலத்திற்கு காலம் மாற்றங்களை பெற்று வளர்ந்து செழித்து இன்றளவும் சிறப்புடன் திகழ்வது. பன்னெடுங்காலமாக செய்யுள் நடையையே இலக்கிய வழக்காக தகவமைத்துக் கொண்ட தமிழ் இலக்கிய மரபில் ஆங்கிலேயர் வரவால் ஏற்பட்ட உரைநடை பல்வேறு ஆக்கக்கூறுகளைக் கொண்ட மிக முக்கியமான மாற்றங்களை நிகழ்த்தி இருக்கின்றது. செய்யுளிலில் இருந்து புனை கதைக்கு, புதினம், சிறுகதை வடிவங்களுக்கு, உரைநடைக்கு மாறிய இம்மாற்றம் வரவேற்கத்தக்கதாகவும் இன்றியமையாத மாற்றமாகவும் அமைந்தது. உரைநடையை படைப்பிலையத்திற்கு பயன்படுத்தி ஏராளமான நாவல்கள் வெளிவர துவங்கின. தமிழக நாவல் வரலாற்றை உரைநடையின் வளர்ச்சியோடும், அச்சுப் பண்பாட்டோடும், பத்திரிகைகளின் பெருக்கத்தோடும் தொடர்புபடுத்திய காணவேண்டி உள்ளது. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றியதாக கருதப்படும் நாவல் இலக்கியம், பல்வேறு வகை மாதிரிகளில் பல்கிப் பெருகின வரலாற்று நாவல்கள், துப்பறியும் நாவல்கள், வட்டார நாவல்கள், தழுவல்கள் என ஏராளமாக வெளிவந்துள்ளன. மேலைநாட்டு கோட்பாடுகளின் அறிமுகம் தமிழ் நாவலில் பல புதிய திருப்பங்களை உருவாக்கின. அதன் காரணமாக மாக்சிய நாவல்கள், பெண்ணிய நாவல்கள், தலித்திய நாவல்கள், பின்னவினத்துவ நாவல்கள், அறிவியல் புனை கதைகள், திராவிட நாவல்கள், இனவரவியல் நாவல்கள், உளவியல் நாவல்கள் என பல்வேறு கருத்தியல் அடிப்படையில் நாவல்கள் வகைப்படுத்தப்பட்டன. வரலாற்று நாவல்களில் தன் வரலாற்று நாவல்கள் மிக முக்கியமானவை. வட்டார பண்புடனும் எதார்த்த தன்மையுடனும் இந்நாவல்கள் படைக்கப்பட்டன. தன்னுடைய வரலாற்றை தானே அழகியல் நுட்பத்தோடும் புனைவாக்கத் திறனோடும் இலக்கிய வடிவமாக எடுத்துரைப்பது தன் வரலாற்று நாவலாகும். அந்த வகையில் தன் வரலாற்று நாவல்கள் ஒரு முக்கிய இலக்கிய வடிவமாக பரவலாக்கம் பெற்றுள்ளன. இவ்வியல் தமிழ் நாவல் எழுந்த சூழல்களையும் அவற்றுள் தன் வரலாற்று நாவல் பெறும் இடத்தையும் ஆராய்வதாக அமைகிறது.

Item Type: Article
Subjects: Tamil > Tamil
Domains: Tamil
Depositing User: Mr IR Admin
Date Deposited: 09 May 2026 12:47
Last Modified: 09 May 2026 15:07
URI: https://ir.vistas.ac.in/id/eprint/14490

Actions (login required)

View Item
View Item